மதுரை துணை மேயர் நாகராஜன் இல்லத்தில் கடந்த ஒன்பதாம் தேதி தாக்குதல் சம்பவம் குறித்து நேரில் பார்வையிட வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் விஜயராஜன் மற்றும் நிர்வாகிகளுடன் துணை மேயர் அலுவலகம் வீடு மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார் பின்னர் துணை மேயர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது,
மதுரை துணை மேயர் நாகராஜன் மக்களுக்கு அன்பு அறிமுகமானவர் இந்த பகுதியில் கடந்த 9ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வீடு மற்றும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய குற்றவாளிகளை காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை ஆய்வாளருக்கு துணை மேயர் மனைவி போன் செய்தபோது மீட்டிங்கில் இருக்கிறேன் என கூறினால் என்ன நியாயம்.
அரசியலில் வன்முறை இப்படிப்பட்ட அராஜக போக்கை என்றைக்குமே ஆதரிக்க கூடாது.
வன்முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கிற கட்சி அல்ல .இதை வன்மையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு சார்பில் நாங்கள் கண்டித்து இருக்கிறோம்.
ஏற்கனவே அரசினுடைய கவனத்திற்கு இதனை கொண்டு போய் இருக்கிறோம். இப்படிப்பட்ட மோசமான செயல் அதும் பகல் மாலை ஆறு மணிக்கு இவ்வளவு பெரிய சம்பவம் ஒரு துணை மேயர் அறிமுகமான ஒரு தலைவர் . இது எப்படி இந்த மாவட்டத்தில் இருக்கிற காவல்துறை இந்த பகுதியில் இருக்கிற அதிக காவல்துறை அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
குற்றவாளிகள் சர்வ சுதந்திரமா நடமாடுற மாதிரி தான் தெரியுது.
மாலை நேரத்துல ஒரு வீட்டில் புகுந்து குடும்பத்தில் இருக்கிறவர்களை தாக்க முயன்றால் குடும்பத்தில் எப்படி இருக்கும் .
எந்தவிதமான தயக்கமும் இல்லாம இவ்வளவு துணிச்சலா அவங்க செயல்படுறாங்கனா இதுக்கு எல்லாமே காரணம் இவர்களுக்கு பின்னாடி இவளோடு கைகோர்த்து இருக்கிற காவல்துறை இருக்குமோங்க சந்தேகம் தான் வருது.
தாக்குதல் குறித்து காவல்துறை இன்ஸ்பெக்டரிடம் கூறினால் கூட்டத்துல இருக்கேன் அப்படின்னு சொல்றார்னா அப்படிப்பட்ட காவல்துறை அதிகாரி எப்படி அவருக்கு சம்பந்தமே இல்லாம இது நடந்திருக்குமா என்கிற சந்தேகம் தான் வருது.
காவல்துறையும் மாவட்ட நிர்வாகம் ஒரு முழுமையான விசாரணை என்பது நடத்தப்படும் காவல்துறையில் இருக்கிற உள்ளூரில் இருக்கக்கூடிய அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரிக்கணும்.
ரெண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் உடனடியாக அவர்களை கைது செய்து இந்த மாதிரி குற்ற நடவடிக்கை பின்புலத்தில் இருக்கிற நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய சக்திகளை முழுக்க முழுக்க கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல்துறையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
ஏன்னா ஏற்கனவே பல நேரங்களில் மதுரையில இது போன்ற சம்பவங்கள் நடந்து இருக்கலாம் இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது மேலும் இது குறித்து நான் முதலமைச்சரை சந்திக்க உள்ளேன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









