சிறுவாலை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடம்; ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார்.

அலங்காநல்லூர் அருகே சிறுவாலை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சிறுவாலை ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு தொகுதி திட்டம் 2021- 2022 ஆண்டுக்கான 25.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தினை, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியம்மாள் ராஜு, மதுரை மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சோனாப்ரியா, ஓபிஎஸ் அணி வடக்கு மாவட்டச் செயலாளர் முருகேசன், மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட அவைத்தலைவர் தனபாலன், மாவட்டப் பொருளாளர் துதி திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலாளர்கள் ஜோதிமுருகன், சேது சீனிவாசன், கழக ஊராட்சி செயலாளர் பிரபாகரன், மற்றும் நிர்வாகிகள் முருகேசன், நகரிமூர்த்தி, சிறுவாலை செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!