தறி கேட்டு ஓடிய ரோடு லோடர்; ட்ரை சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மோதி எலக்ட்ரிக்கல் கடைக்குள் சென்றதால் பரபரப்பு..
மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு அதிக அளவு ஆள் நடமாட்டம் உள்ள எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் டிவிஎஸ் நகர் பகுதியில் மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் சாலை போடும் பணியை முடித்துவிட்டு டிவிஎஸ் நகர் மேம்பாலம் வழியாக பழங்காநத்தம் வழியாக ரோடு ரோலர் ஓட்டுனர் செந்தில் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.




திடீரென வேகம் எடுத்த ரோடு ரோலர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ட்ரை சைக்கிள் ட்ரை சைக்கிள் ஓட்டி வந்த நபர்கள் மீது பயங்கரமாக மோதியது. பின் அருகே உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடைக்குள் புகுந்து ரோடு ரோலர் நின்றது. சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சுக்கு நூறாக அடியில் சிக்கி நொறுங்கியது. வெறும் ட்ரை சைக்கிள் ஓட்டி வந்த நபர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ட்ரை சைக்கிள் பலத்த சேதம் ஏற்பட்டது.
பொதுவாக பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு பகுதி அதிக பொது மக்கள் நடமாடும் பகுதியாகும். மேலும் நான்குக்கும் மேற்பட்ட பள்ளிகள் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் நேரம் என்பதால் பள்ளி குழந்தைகள் அதிக அளவு நடமாட்டம் இருந்துள்ளது. ரோடு ரோலர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடியதை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கே ஓடினர். பெரிய அளவிற்கு நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் மற்றும் திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ரோடு ரோலர் ஒன்று தறிகட்டு ஓடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









