மதுரையில் இரு சக்கர வாகனம் பட்டப்பகலில் திருட்டு..

மதுரை மாவட்ட  ஆட்சியரக வளாகத்தில் அரசு அலுவலரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருட்டு..

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் கண்ணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை,  ஆட்சியரகத்தின் வளாகத்தின் உள்ளே வட்ட வழங்கல் அலுவலகத்தின் வெளியே நிறுத்தி விட்டு, அலுவலகத்துக்கு சென்று விட்டார். பணி முடிந்து மதியம் வந்து பார்த்த போது,  அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மேற்கண்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொள்ளும் பொழுது டிப் டாப்பாக வந்த அடையாளம் தெரியாத ஒருவர் சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. ரமேஷ் கண்ணனின் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து தல்லாகுளம் காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!