மதுரை அவனியாபுரம் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது..
அவனியாபுரம் குருநாதன் கோவிலில் அமைந்துள்ள சிரஞ்சீவி ஆஞ்சநேயர் சன்னதியில் இன்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இது கோயிலில் மார்கழி மாத அமாவாசை விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு யாக சாலை பூஜையுடன் துவங்கி மூலவர் சிரஞ்சீவி ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் , திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேம் நடைபெற்ற பின்னர் அலங்காரம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து தீபாராணை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் பூசாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.