மதுரை வில்லாபுரம் பகுதியில் 3 மாதம் சம்பளம் வழங்காதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் ஆர்பாட்டம்..

மதுரை வில்லாபுரம் பகுதியில் 3 மாதம் சம்பளம் வழங்காதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் ஆர்பாட்டம்..

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 க்குட்பட்ட வார்டு எண் 84, 86, 90, 91 ல் உள்ள 4 வார்டுகளில் பணிபுரியும் 60க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட துப்புறவு பணியாளர்கள் வில்லாபுரம் வெற்றி தியேட்டர் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் மங்கையர்திலகம் சார்பு ஆய்வாளர் மணிராஜ் ஆகியோர் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து சாலை ஓரத்தில் அமர்ந்து சம்பளம் வழங்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர். வி சிக துப்புரவு சங்க தொழிலாளர் முண்ணனி நிர்வாகிகள் பூமிநாதன் DPI முத்து. நெடுஞ்செழியன், உள்ளிட 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து அவர் லேண்ட் துப்புரவு ஒப்பந்த நிறுவன மேலாளர் பிரகாஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தையில்  சம்பளம் வழங்குவதாக உறுதியளித்தன் பேரில் துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

மதுரை விமான நிலையம் சாலையில்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!