வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாவட்ட முன்னோடி வங்கி!- கனரா வங்கி இணைந்து கல்வி கடன் மேளா சிறப்பு முகாம்..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை முன்னோடி வங்கி கனரா வங்கி இணைந்து கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்வேலம்மாள் பொறியியல் கல்லூரி முதன்மை முதல்வர் சுரேஷ் வரவேற்புரை கூறினார் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையேற்றார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மாணவர்களிடம் பேசும் போதுமாணவர்கள் கல்வி கற்க நிதி மிகவும் நெருக்கடியாக உள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களது உயர் கல்வி பாதிப்படையாமல் இருக்க மாணவர்களுக்கான கல்வி தொடர வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 84 கோடி ரூபாயிலிருந்து 98 கோடி 116 கோடி என்றும் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரை 138 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்வி கடன் வழங்கு வதில் மகராஷ்ட்ரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 89 சதம் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் கல்வி கடன் வாங்குவதில் சிறப்பாக செயல்படுகின்றன மாவட்ட நிர்வாகமும் வங்கிகளும் இணைந்து பல்வேறு வகையில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக கல்வி கடன் தொடர்பாக பெறப்பட்ட 2400 விண்ணப்பங்களில் 2181 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சுமார் 138 கோடி ரூபாய் ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இது கல்வி கடன் வழங்க அதிகபட்சம் 84% சதம் என்ற அளவில் உள்ளது.
வரும் காலங்களில் இன்னும் அதிகமாக மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கல்வி கடன்களில் தனியார் வங்கியில் பங்களிப்பு இல்லாமல் இருந்ததே மாவட்ட நிர்வாகம் செய்த ஏற்பாட்டின் படி தற்போது தனியார் வங்கிகளும் கல்விக்கடன் வழங்குவதில் முனைப்புடன் செயல்படுகின்றன என மதுரைநாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறினார்.
விழாவில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மதுரை மண்டல முன்னோடி வங்கி மேலாளர் அணில் மற்றும் முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் சந்தன பாண்டியன் மற்றும் தனியார் அரசு சார்ந்த வங்கிகள் முகாமில் கலந்து கொண்டு மாணவ , மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கினர்.
விழா முடிவில் மதுரை மண்டல முன்னோடு வங்கி மேலாளர் அணில் நன்றியுரை கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









