சமுதாயம் குறித்து, இழிவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பாஜகவினர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் மனு..

சமுதாயம் குறித்து, இழிவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பாஜகவினர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் மனு..

மதுரை, அண்ணா நகர் காவல் நிலையத்தில், பாஜகவினர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது

எங்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் அவர்களின், குறிப்பிட்ட சமுதாயம் குறித்து, இழிவையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும் விதமாகவும், மற்ற சமூகத்தினரிடையே பகை உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடனும், மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பும், மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுவர்களிலும், அவதூறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டிகளில் அந்த சமுதாய நிர்வாகிகளுக்கு, எங்கள் கட்சியில் பொறுப்பு போட சொன்னதற்காக சீனிவாசனை கண்டித்தும், அவர் மீது மற்ற சமூககத்தினருக்கு பகையை மூட்டும் விதமாகவும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. புகாரை பெற்ற போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!