ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவர் மீது சோழவந்தான் போலீசில் புகார், பணத்தை மீட்டு தர கோரிக்கை..

ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவர் மீது சோழவந்தான் போலீசில் புகார், பணத்தை மீட்டு தர கோரிக்கை..

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (வயது 54). இவர் வழக்கு விஷயமாக மதுரை ஆர்டிஓ கோர்ட்டுக்கு சென்றபோது அங்கு ஓட்டுனராக பணிபுரிந்த திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. விவசாயம் செய்து வந்த முஜிபுர் ரஹ்மான் மிகுந்த சிரமத்தில் இருந்ததை புரிந்து கொண்ட ராமகிருஷ்ணன் ஆர்டிஓ நீதிமன்றத்தில் உனக்கு டிரைவர் பணி வாங்கித் தருகிறேன் என்று கூறி 98 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார் மேலும் டிரைவர் பணிக்கு மொத்தம் மூன்று லட்ச ரூபாய் வேண்டுமென்றும் கூறியுள்ளார் மேலும் பணத்தைப் பெற்றுக் கொண்ட ராமகிருஷ்ணன் வேலை வாங்கி தராமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார். கொடுத்த பணத்தை முஜுப்பூர் ரகுமான் திருப்பி கேட்டபோது அவரது பேங்க் அக்கவுண்ட்டிற்கு ஒருமுறை பத்தாயிரம் மற்றொரு முறை ஐந்தாயிரமும் முஜிபூர் ரஹ்மானுக்கு அனுப்பி உள்ளார். மீதி பணத்தை கேட்டபோது ராமகிருஷ்ணன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன முஜிபுர் ரஹ்மான் இது சம்பந்தமாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் பாதிக்கப்பட்ட முஜிபூர் ரஹ்மான் தனது பணத்தை மீட்டு தரும்படி காவல்துறையிடம்கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பணத்தை மோசடி செய்த திருவேடகம் ராமகிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர்,வி.காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!