சோழவந்தான் அருகே வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு! தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்..

சோழவந்தான் அருகே வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு! தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்..

மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி இவரது வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார் நேற்று அதிகாலை நாலு மணி அளவில் வீட்டுக்குள் பாம்பு புகுந்து உள்ளது இதை பார்த்த தங்கபாண்டி மற்றும் அருகில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டனர் இதனால் அக்கம் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் எழுந்து வந்து வேடிக்கை பார்த்தனர் இதனைத் தொடர்ந்துசோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் இதன் பேரில் நிலை அலுவலர் டபுள் எக்ஸ் பாதுஷா தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டுக்குள் சல்லடை போட்டு தேடினர் இதைத் தொடர்ந்து வீட்டில் சுவர் அருகே டார்ச் லைட்டை வைத்து பாம்பைதேடினார்கள் வீட்டில் வாசல் அருகே உள்ள சுவற்றின் ஓட்டையில் பாம்பு இருப்பதை தீயணைப்பு படையினர் கண்டுபிடித்தனர் அதை அரை மணி நேரம் போராடி பிடித்தனர் பாம்பு சுமார் 7 அடி நீளத்தில் மலைப்பாம்பு என்று தெரிவித்தனர் அதிகாலை வேலையில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்ததால் தங்கப்பாண்டி உட்பட அருகில் குடியிருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர் இதை சோழவந்தான் வன காவலர்பிரேம் குமாரிடம் அதிகாலையில் பிடிபட்ட பாம்பு ஒப்படைக்கப்பட்டது பிடிபட்டமலைப்பாம்பை அருகிலுள்ள குட்லாடம்பட்டி வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!