கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் 4 வருடங்களாக சிவகங்கை போலீஸாரால் தேடப்பட்டவர் மதுரை விமானநிலையத்தில் கைது..
சிவகங்கை மாவட்டம் நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்த தெற்கு வளைவு தெரு சின்ன கருப்பன் மகன் கலையரசன் (வயது 50, ) இவர் மீது கடந்த 2020ஆம் ஆண்டு சிவாநாச்சியாபுரம் போலீஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தலைமறைவானார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுகோட் நோட்டீஸ் அனுப்பினார் அதனைத் தொடர்ந்து தேடப்படும் குற்ற வழியாக அறிவிக்கப்பட்டகலையரசன் இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உண்டான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் அதனை தொடர்ந்து மதுரைத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில் 2020 ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளி என கண்டறிந்தனர் இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் நாச்சியார் புறம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர்கலைவாணி மற்றும் காவல் துறையினர் மதுரை விமான நிலையம் வந்தடைந்து கலையரசனை கைது செய்து அழைத்துச் சென்றனர்
கொலை முயற்சி வழக்கில் நான்கு ஆண்டுகள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த கலையரசன் மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









