தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு காவல்துறை நடத்திய வாகன பேரணி..
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து சீட் பெல்ட் அணிவது குறித்த நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முதல் தெப்பக்குளம் வரை மேற்கொண்டனர்.இந்நிகழ்வினை மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையர், போக்குவரத்து உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். 120 நான்கு சக்கர வாகனங்கள் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு பேரணியில் சீட் பெல்ட் அணிவதன் நன்மை குறித்தும் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.