பேரயூைரில் உள்ள அய்யனார் கோயில் ஓடை அணையை பாதுகாக்க வேண்டுமென, குண்டாறு செயற்பொறியாளரிடம் நீர்நிலை ஆர்வலர்கள் மனு..

பேரயூைரில் உள்ள அய்யனார் கோயில் ஓடை அணையை பாதுகாக்க வேண்டுமென, குண்டாறு செயற்பொறியாளரிடம் நீர்நிலை ஆர்வலர்கள் மனு..

மதுரை, இயற்கை பண்பாட்டு மையம் சார்பில், குண்டாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருந்ததாவது;

பேரயூைர் வட்டம், மள்ளபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ம.கல்லுபட்டி அருகே அய்யனார்புரத்தில், 2004ல் அய்யனார் கோயில் ஓடை அணை கட்டப்பட்டது. 55 ஏக்கர் பரப்பளவில், 521 அடி உயரம் கொண்ட இந்த அணையின் சுவர்களில் பல பொத்தல்கள், ஓட்டைகள் ஏற்புட்டு, வெள்ளநீர் மதகு சுவர் ஓட்டைகள் வழியே, நொடிக்கு நொடி நீர்கசிந்து வருகிறது. இந்த அணையை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் பலனடைந்து வரும் நிலையில், தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதும், அணையிலிருந்து வெளியே வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை விவசாய சங்கங்களுடன் இணைந்து, மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!