குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்

மதுரை சுகாதார துணை இயக்குனர் அலுவலகமும் சாத்தி தொண்டு நிறுவனமும் யுஎஸ்எய்ட் மொமன்டம் .குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் அதனை தொடர்ந்து இன்றுஜம்புரோபுரம் HWC, நரிமேடு UPHC,நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நகர் புற நலவாழ்வு மையத்திலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தாய்மார்கள் தங்கள் குழந்தையுடன் வந்து தடுப்பூசி செலுத்திவிட்டு சென்றனர் .குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடக்கும் இடத்தை நேரடியாக சாத்தி தொண்டு நிறுவனத்தின் மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் பார்வையிட்டார் உடன் பணியாளர்கள் ரியாஸ் மற்றும் தினேஷ் ,ராஜ்சுந்தர் உடன் இருந்தனர். அன்றைய தினத்தில் வர வேண்டிய தாய்மார்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டனரா வராமல் ஏதும் தாய்மார்கள் யாரும் இருக்கிறார்களா அப்படி வராமல் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்தனர்.தடுப்பூசி செலுத்தாமல் இருந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!