அதிமுக அரசு 250 ஏக்கர் நிலத்தை வழங்கியதால் தற்போது மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கியுள்ளது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்காக அதிமுக அரசு 250 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்ததால் தான் தற்போது எய்ம்ஸ் பணி நடைபெற்று வருகிறது என எய்ம்ஸ் பணி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் ஆர் உதயகுமார் பேட்டிமதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட நிலையில் கட்டிடப் பணிகள் தொடங்கப்படாத நிலையில் கடந்த வாரம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட எல் & டி நிறுவனம் வாஸ்து பூஜை செய்து தொடர்ந்து 242 ஏக்கர் பரப்பளவு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான பணிகளை மேற்கொள்ள அலுவலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பணிகளை முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி துணை தலைவருமான உதயக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் அருகில் உள்ள நெஞ்சக மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள சிறப்பு மருத்துவமனை கட்டிடங்களையும் பார்வையிட்டார் ஆய்வின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன் சரவணன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் மாவட்ட அவைத் தலைவர் முருகன் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் ராமையா சார்பு அணி நிர்வாகிகள் சரவணபாண்டியன் ராமகிருஷ்ணன் வழக்கறிஞர்கள் தமிழ்செல்வம் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தென் மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை நிறைவு செய்கின்ற வகையில் ஜெயலலிதா கண்ட கனவு. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வர வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவை நினைவாக்கும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தெரிவித்து இந்த திட்டத்தை உருவாக்கி இங்கே கொண்டு வந்தார்கள் மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டவுடன் 250 ஏக்கர் பரப்பளவு நிலம் மாநில அரசு மூலம் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டது இந்த இடம் மண் பரிசோதனை செய்து ஏற்றுக் கொண்டார்கள் ஜெயிக்கா நிறுவனத்தின் நிதி பெறுவதற்காக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கொரோனா வந்த காரணத்தினால் தற்போது காலதாமதமானது. ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்த இந்த திட்டம் தற்போது பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கேட்டவுடனே 11 மருத்துவ கல்லூரிக்கு எடப்பாடி பழனிச்சாமி தேவையான நிலங்களை கையகபடுத்தி கொடுத்து இந்தியாவில் யாரும் செய்ய முடியாத அளவிற்கு 11 மருத்துவ கல்லூரி பெற்றுக் கொடுத்தாரோ அதே போல் எய்ம்ஸ் மருத்துவமனையும் பெற்றுக் கொடுத்து ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கோடான கோடி நன்றியை மாவட்ட மக்களின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்..செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!