மோடியின் பத்தாண்டு கால ஆட்சி பாசிச ஆட்சியாக  உள்ளது. ஒரே நாடு ஒரே மதம் ஒரே உணவு என்று பாசிச கொள்கையை திணிக்கிறார் மோடி!- கருணாஸ் கடும் தாக்கு

இந்தியா கூட்டணி சார்பில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் சு. வெங்கடேசனை ஆதரித்து நடிகர் கருணாஸ் பிரச்சாரம்..

மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சியை சேர்ந்த நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அதானி, அம்பானி, விஜய் மல்லையா, போன்றவர்களுக்கு 17 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார் மோடி.  சாமானிய மக்களை வாட்டி வதைக்கிறார் 36 ஆவது இடத்தில் இருந்த இந்தியாவை பொருளாதாரத்தில் 140 வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மோடியின் பத்தாண்டு கால ஆட்சி பாசிச ஆட்சியாக  உள்ளது. ஒரே நாடு ஒரே மதம் ஒரே உணவு என்று பாசிச கொள்கையை திணிக்கிறார். இந்நிலையில் மீண்டும் மோடியின் ஆட்சி வராமல் இருக்க இந்தியா கூட்டணி சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட மக்கள் சேவகர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு அறிவியல் சின்னத்தில் வாக்களிக்க  வேண்டும். ராமர் கோவில் கட்டியதாக கூறுகிறார் 300 வருடங்களுக்கு முன்னதாகவே நாம் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கோயிலை கட்டியுள்ளோம்.துரோகி எடப்பாடியின் செயலை முறியடிக்கவும் மத்தியில் இந்தியா கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கவும் மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு அறிவியல் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!