மதுரை மாவட்டத்தில் புதிய விரிவான மினிப்பேருந்து திட்டம் .! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .!!

மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம் – 2024 , பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள்/ குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியினை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த “புதிய விரிவான மினிபேருந்து திட்டம் 2024” அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:-

1. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் நீளம் 25 கி.மீ. ஆக இருக்க வேண்டும்.

2. குறைந்த பட்ச சேவை செய்யப்படாத (Minimum Un-served route length) பாதை நீளம் பாதையின் நீளத்தில் 65% குறைவாக இருக்க கூடாது.

3. தொடக்கம்/முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு/ கிராமம் அல்லது பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடமாக இருக்க வேண்டும்.

4. முயையப்புள்ளியில் இருந்து அடுத்த 1 கி.மீ. தூரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, இரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலூகா அலுவலகம், புகழ் பெற்ற வழிபாட்டு தலங்கள் அதிகபட்ச பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும் நேர்வில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்ற பங்குதாரர்களுடன் ‘கலந்து ஆலோசித்து அதாவது போக்கவரத்து கழகம், உள்ளாட்சி அமைப்புகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோருடன் ஆலோசித்து மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.

5. பழைய மினிப்பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு எழுத்துபூர்வமாக விருப்பத்தினை அளித்து பழைய அனுமதிச்சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ. கூடுதல் சேவை செய்யப்படாத பாதையாக இருக்க வேண்டும்.

6. மினிப்பேருந்து இருக்கைகள், ஓட்டுநர் – நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினிப்பேருந்தின் Wheel Base 390 cm-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

7. நிலைப்பேருந்து அல்லது மினிப்பேருந்துகள் 4 நடைகளுக்கு குறைவாக இயக்கப்படும் பகுதிகள் சேவை செய்யப்படாத பாதையாக கருதப்படும்.

 மதுரை மாவட்டத்தில் புதிய விரிவான மினிப்பேருந்து திட்டம் 2024-ன் படி வழித்தட விபரங்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் 15.02.2025-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!