76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான், சாமநத்தம் ஊராட்சிகள், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கொந்தகை காஞ்சிரங்குளம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
இக்கிரமசபை கூட்டங்களில் வரவு செலவு தணிக்கை அறிக்கை ஜல்ஜீவன் திட்டம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம், திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்மணி, பேராச்சிபிரேமா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலாதேவி, ஊராட்சி செயலர்கள் சுரேஷ் கண்ணன், பாண்டுரங்கன்,ரஞ்சிதா, கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.