*மதுரை மகாத்மா குளோபல் பள்ளியில் தமிழ்நாட்டின் சிறப்பம்சங்களை கொண்டாடும் பெஸ்ட் ஆப் தமிழ்நாடு(BOT) அறிமுகம்*
நாட்டின் பண்பாடு கலாச்சாரம் தொன்மையான வரலாற்று நினைவு சின்னங்கள் பராம்பரியங்களை போற்றும் வகையிலும் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தமிழ்நாட்டின் சிறப்பு அம்சங்களை கொண்டாடும் பெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு இருந்து வருகிறது. மேலும் இன்றைய பள்ளி / கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியத்தை நினைவு படுத்தும் விதமாக மதுரை கருப்பாயூரணி அருகே மகாத்மா குளோபல் பள்ளியில் பெஸ்ட் ஆப் தமிழ்நாடு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி பெஸ்ட் ஆப் தமிழ்நாடு தலைவர் விஜயதர்ஷன்,மகாத்மா பள்ளி தலைவர் கார்த்திக், பள்ளி மேலாண்மை அகாடமி டைரக்டர் அம்சபிரியா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு அனிதா,ஹலோ எஃப்எம் ஆர்ஜே மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் மீனாகருப்பையா,ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.