மதுரையில் அதிநவீன ஏசி பேருந்து; வியர்வையில் குளித்த பயணிகள்..

மதுரையில் அதிநவீன ஏசி பேருந்து; வியர்வையில் குளித்த பயணிகள்..

மதுரை பயணி ஒருவரின் ஏசி அனுபவம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி TN58N2568 என்கின்ற அரசு பேருந்து நேற்று காலை 9.50 மணி அளவில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது.

திருமங்கலத்திற்கு ரூபாய் 40 கட்டணம் செலுத்தினோம். பேருந்து ஏறிய பிறகு தான் தெரிய வருகிறது இது செயற்கையான ஏசி பேருந்து இல்லை எனவும், கதவை திறந்து வைத்து ஏசி போடும் பேருந்து என தெரிய வந்தது.

இதனால் மனம் நொந்து போய் நடத்துனரிடம் கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் நீங்க நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என அலட்சியப் போக்கில் பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போதிய அளவில் பராமரிப்பு இல்லாமல் எவ்வித பாதுகாப்பு குளிர்சாதன வசதிகள் இல்லாமல் அதற்கான கட்டணத்தையும் வசூல் செய்து தானியங்கி கதவு திறந்து வைத்து மக்களை பயணம் செய்து வைத்தது பொதுமக்களிடையே பயணிகள் இடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. வெயிலு வெயிலுனு ஏசி பஸ்சுல போனா – ஏசி போடாம கதவை திறந்து விட்டு ஹாயா பஸ்ஸை ஓட்டுகிறார்கள் – வியர்வையில் குளித்த நொந்து போய் வேறு வழியின்றி சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!