மதுரையில் ‘டெங்கு’ காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது..!
இதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் அதிகமாக வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் காவல்துறையினர் பாதுகாப்புடன் மருந்து, மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுகிறது. ‘டெங்கு’ காய்ச்சலினால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியாமல் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் திணறுகின்றனர். இந்த டெங்கு காய்ச்சலுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கப் படுகின்றனர். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனிக்காமல் மரணமடைவதால் மதுரை மக்கள் அச்சத்தில் உள்ளனர். மதுரை மாநகராட்சி அதிகாரிகள் டெங்குவை கட்டுப்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. வீடுகளில் கீழே வைக்கப்பட்டுள்ள டிரம்களில் உள்ள தண்ணீரில் டெங்கு புழுக்கள் உள்ளதா என மட்டுமே மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். வீடுகளின் மாடியில் வைக்கப்பட்டுள்ள மேல்நிலை சின்டெக்ஸ் தொட்டிகளில் டெங்கு புழுக்கள் உள்ளனவா என
சோதனை செய்வதில்லை. பெரும்பாலும் மாடிகளில் வைக்கப்பட்டு உள்ள சின் டெக்ஸ் தொட்டிகளில் டெங்கு புழுக்கள் உருவாகிறது. மேல்நிலை தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்வதற்கு வீட்டு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் இருக்கும் திறந்த நிலையில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் டெங்கு புழுக்கள் உருவாகிறது. முன்பு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த வீரராகவராவ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி அவர்கள் பல வீட்டு மாடிகளில் இருக்கும் சின்டெக்ஸ் தொட்டிகளில் சோதனை செய்து டெங்கு புழுக்கள் இருந்தால் அபராதம் விதித்து வந்தனர். இதனால் வீட்டு உரிமையாளர்கள் அபராதம் கட்ட பயந்து மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்து வந்தனர். எனவே மீண்டும் மேல்நிலை தொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து சுத்தம் இல்லாமல் டெங்கு புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்க வேண்டும். அப்படி செய்தால் டெங்கு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரை, கனகராஜ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









