முக்கவசம் அணிவது கட்டாயம் என மதுரை மாநகராட்சி இன்று (20/05/2020) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் முக கவசம் அணியாத நபர்கள் யாராக இருந்தாலும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் IAS இன்று அறிவிப்பை வெளியிட்டார். இதனடிப்படையில் மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மதுரை திருநகர் பகுதியில் உள்ள வார்டு 97&98களில் சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் மேற்கொண்ட ஆய்வில் முக கவசம் அணியாமல் சாலையில் தெரிந்த நபர்களுக்கு தலா 100 ரூபாய் வீதம் அபராதம் விதித்தார். அதே போல் கடைகளில் ஆய்வு செய்து முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்த நபர் மற்றும் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இது பற்றி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்’ “யாராக இருந்தாலும் கட்டாயம் கவசம் அணிந்து வெளியே வர வேண்டும், தவறும் பட்சத்தில் கட்டாயமாக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் இது உங்கள் நலனுக்காகவே முக கவசம் அணிய சொல்கிறோம், இதை அனைவரும் பின்பற்றினால் தமிழகத்திலிருந்து கொரொனோ தொற்றை முற்றிலுமாக ஒழித்து விடலாம் என இதற்கு முழு ஒத்துழைப்பு பொதுமக்கள் தர வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றை ஒழிப்பது அரசு மட்டும் முயற்சி செய்தால் போதாது பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தொற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print


















