மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு, பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் (0/4/112019) இன்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென மண்னெண்ணையை தன்மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். போலீஸாரின் விசாரணையில் உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த லட்சுமி என்றும், தன்னிடம் மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனுர் அருகில் உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்த செல்லம் என்பவரின் மகன் சின்னசாமி ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக லட்சுமி புகார் தெரிவித்துள்ளார். மேலும் பலமுறை உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.பணத்தை திருப்பி கேட்டதால் என்னை சின்னச்சாமி குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவபர்கள் தன் மீது மண்ணென்னெய் ஊற்றி கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. மக்கள் குறைதீர்க்கும் நாளில் தீவிர சோதனை செய்த பிறகே அனைவரையும் அனுமதிக்க வேண்டும். மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை, கனகராஜ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!