மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது..
மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில் தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் இருந்துவந்துள்ளார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவுறைக்குள் சென்று கதவு திறக்கவில்லை எனக் கூறி அருகில் உள்ளவர்களை வளர்ப்பு பெற்றோர் கூறி அழைத்துள்ளனர்.
அது சமயம் அருகில் உள்ளவர்கள் பதறி அடித்து வந்துள்ளனர்.அதன் பிறகு பெற்றோர்களே கதவை உடைத்து சிறுமியை தூக்கி வந்து வள்ளுவர்காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் நிலையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கே சென்றபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமி உயிரிழந்தபோது வீட்டில் சிறுமியுடன் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் வளர்ப்பு பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமியின் பெரியப்பாவானா ராணுவ வீரராக இருந்துவரும் செந்தில்குமார் வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது கத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் பின்னர் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகளின் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து சிறுமியின் உடலை கழிவறைக்குள் போட்டு தண்ணீர் குழாயை திறந்துவிட்டு கதவை மூடியதும் தெரியவந்துள்ளது.
கடைசியாக காளான் பிரியாணி சாப்பிட்டார் அதன் காரணமாக புட்பாய்சன் ஆகி மயங்கியிருக்கலாம் என கூறியதோடு அருகில் உள்ளவர்களையும் கழிவறையில் சிறுமி மயங்கி கிடப்பதாக ஏமாற்றி இவர்களே கதவை உடைத்தும் நடித்தும் நாடகமாடி அருகில் உள்ளவர்களை நம்பவைத்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் 11 வயது வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போக்சோ வழக்கின் கீழ் ராணுவ வீரரான செந்தில்குமார் மற்றும் கொலை சம்பவத்தை மறைத்து உடைந்தயாக இருந்ததாக அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் கூடல்புதூர் காவல்துறையினர கைது செய்தனர். பின்னர் போக்சா நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 வயது சிறுமி பாலியல் கொடூர கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியான வளர்ப்பு பெற்றோரை கைது செய்த கூடல்புதூர் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









