மதுரை பெரியார் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிறுத்தத்தை ஓருங்கிணைக்கும் பணி தீவிரம்…

மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் ஜனவரி 1ம் தேதி அல்லது முதல் வாரத்தில் மூடி பணிகளை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டு, 18 மாதங்களுக்கு பஸ்களை இயக்க மாற்று இடங்களுக்காக, அதிகாரிகள்  தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகளுக்கான அனைத்து திட்டங்களுடன் மாற்று போக்குவரத்து திட்டத்தையும் மாநகராட்சி தயாராக வைத்துள்ளது.

6 அடுக்குகளை கொண்டதாக அமையும் இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் தரை மட்டத்தில் இருந்து இரு தளங்களில் கார் பார்க்கிங் மற்றும் டூவீலர் பார்க்கிங் அமைகிறது. 429 கடைகள் அமைவதோடு, 64 பஸ்களையும் நிறுத்தவும் முடியும்.மதுரை கல்லுாரி பாலம் பகுதியில் இருந்து கட்டப்பொம்மன் சிலை வரையிலான பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலத்திற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை தனியாக நடத்துகிறது.

பஸ் ஸ்டாண்ட் பணிகள் நடக்கும் போது, மதுரை கல்லுாரி பாலம் பகுதியில் இருந்து கட்டப்பொம்மன் சிலை பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் நுழையும் பகுதிகளில் உள்ள கடைகள் அமைந்துள்ள பகுதி வழியாக வந்து பாலத்தின் கீழ்பகுதி வழியாக சிலை பகுதியில் சேரும். இந்த பகுதிகளில் 8 மீ., அகலத்திற்கு தற்காலிக ரோடு அமைக்கப்பட உள்ளது.

பஸ்ஸ்டாண்டில் தற்போது நிற்கும் பஸ்கள் டி.பி.கே.ரோடு, பழைய கட்டபொம்மன் டிப்போ, ஈ.வெ.ரா., பள்ளி, எல்லீஸ்நகர் பார்க்கிங் ஸ்டாண்ட், டி.பி., ரோடு, மதுரை கல்லுாரி பகுதிகளில் நிறுத்துவதற்காகன திட்டங்களும் தயார் செய்யப்பட்டு, போக்குவரத்து துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திட்ட மதிபீப்பீடு விபரங்கள்:-

தொகை : 159.70 கோடி

பணிகள் நடக்கும் பகுதிகள் : பெரியார் பஸ் ஸ்டாண்ட் 15,570 ச.மீ.,

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் 14,500 ச.மீ.,

பஸ் பே : 64 (34,482 ச.மீ.,)

கடைகளின் எண்ணிக்கை : 429

கீழ்தளம் கடைகள் : 250

தரை தளம் கடைகள் : 51

முதல் தளம் கடைகள் : 55 (4,412 ச.மீ.,)

இரண்டாம் தளம் கடைகள் : 55 (4,056 ச.மீ.,)

மூன்றாம் தளம் கடைகள் : 9 (3,715 ச.மீ.,)

நான்காம் தளம் கடைகள் : 9 (3,393 ச.மீ.,)

கீழ்தளம் 1 ல் 371 கார்கள் நிறுத்தும் வசதி (28,274 ச.மீ.,)

கீழ்தளம் 2 ல் 4865 டூவீலர்கள் நிறுத்தும் வசதி (28,274 ச.மீ.)

மதுரை செய்தியாளர்:- கனகராஜ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!