மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு!உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் மீதும் வழக்கு..

 

பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது மகளின் செல்போனுக்கு, பா.ஜ.க. பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளதாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பா.ஜ.க. பிரமுகருடன் தனியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாட்ஸ் அப் மூலமாக, நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துச் சென்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!