மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல் அதிரடியாக விசாரணை நடத்தி குழந்தயை மீட்ட காவல்துறை! இருவரிடம் தீவிர விசாரணை..
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி (39) என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மதுரை ரயில்வே நிலையத்தில் வெளிப்புறத்தில் உறங்கிகொண்டிருந்தபோது 35 வயது மர்ம பெண் ஒருவர் தான் சித்திரை திருவிழாவிற்கு வந்துள்ளதாக கூறி அருகில் உறங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலை எழுந்துபார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தையான சக்திபிரியா வை காணவில்லை என கூறி திடீர் நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் அதிரடியாக விசாரணை நடத்தி கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். குழந்தையை கடத்திய வழக்கில் இருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை
மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள ரயில்வே நிலையத்தில் படுத்து உறங்கிய குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.