மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா..

மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல உறுப்புக் கல்லூரிகளான மதுரை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் பொறியியல் கல்லூரிகளின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பட்டம் வழங்கும் விழா மதுரை கீழக்குயில் குடியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் நடைபெற்றது. 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் மூன்று கல்லூரிகளையும் சார்ந்த 325 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக தரவரிசையில் இடம் பிடித்த 14 மாணவர்களுக்கு தங்கபதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

செய்தியாளர்-வி.காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!