துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மதுரை விமான நிலைய சுங்கா இலாக்கா அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது தஸ்தகீர் (வயது 21) சந்தேகத்திற்குரிய வகையில் சென்றதை கண்டு அவரை மதுரை விமான நிலைய சுங்கா இலாக்கா அதிகாரிகள் ஸ்கேன் கருவி சோதனை செய்தனர். அப்போது முகமது தஸ்தகீர் தனது ஆசனவாயில் ஒரு பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆசனவாயில் இருந்த பொருளை எடுத்து சோதனை செய்தபோது பேஸ்ட் வடிவில் இருந்த 790 கிராம் மதிப்புள்ள 24 கேரட் தங்கம் என தெரிய வந்தது அதன் மதிப்பு சுமார் 55 லட்சத்து 97 ஆயிரத்து 150 ரூபாய் என சுங்சுங்கா இலாக்கா அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.