மதுரை விமான நிலையத்தில் 4 காற்று வகை துப்பாக்கி கொண்டு வந்த வாலிபரால் பரபரப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு இரண்டு சக்கர வாகனம் மூலம் வந்த வாலிபர் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார். இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மடக்கி விசாரணை செய்தனர்.

இது குறித்து அவர்கள் விசாரணை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் 3 துப்பாக்கி மற்றும் 4 செல்போன்கள் இருந்தன. அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வெங்கடசமுதிரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் அஸ்வத்தாமன் (வயது 21) பட்டதாரி வாலிபர் என தெரிய வந்தது. இவர் கல்லூரியில் படிக்கும்போதே என்சிசிஇல் இருந்துள்ளார். தற்போது அவர் மனநலம் பாதித்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் மதுரை விமான நிலையம் வந்ததாக கூறப்படுகிறது.

இமையடுத்து அஸ்வத்தாமனின் தந்தை பாஸ்கரனை வரவழைத்து போலீசார் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!