மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 192 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! சுமார் நூறு பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்றது..
துபாய் செல்லும் விமானத்தின் மொத்த எடை அளவு அதிகமானதால் பயணிகளின உடமைகள் நாளை கொண்டு செல்லப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு செல்ல தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை செயல்பட்டு வருகிறது. துபாயிலிருந்து 188 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று பகல் 12:30 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.மீண்டும மதுரை விமான நிலையத்தில் இருந்து 192 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் பயணிகளின் மொத்த இருக்கை 180 அளவில் இருந்தும் குழந்தைகள் உள்பட 192 பயணிகள் மதுரையில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். இதில் அதிக எடை காரணமாக 92 பயணிகளின் உடமைகள் மட்டும் விமானத்தில் ஏற்றப்பட்டது 100 பயணிகளின் உடைமைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டு செல்லப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். உடைமைகள் இல்லாமல் தற்போது துபாயிக்கு பயணம் சென்ற பயணிகள் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் வி காளமேகம் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









