மதுரை விமான நிலைய கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் விமான நிலைய கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது.முன்னாள் நடாளு மன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.மதுரை விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய கார் ஓட்டுநர் சங்கம் செயல்படுகிறது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்கள் உறுப்பினராக உள்ளனர் ஆண்டுக்கு ஒரு முறை விமான நிலைய வளாகத்தில் உள்ள முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் கிடாவெட்டி விருந்து வைக்கப்படும் இந்நிலையில் டாக்ஸி ஓட்டுனர் சங்கம் சார்பில் சரவணன், செல்லக்கண்ணு கண்ணன் ,மின்னல் வீரன் மற்றும் கண்ணன், மலைச்சாமி ஆகியோர் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்தனர் முனியாண்டிஸ் கோவிலை சிறப்பு பூஜைக்கு பின் கிடா வெட்டி அன்னதானம் நடைபெற்றதுமதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான கோபாலகிருஷ்ணன் எம்பி கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.செய்தியாளர் வி காளமேகம்

You must be logged in to post a comment.