அயோத்திக்கு ஆண்மீக பயணம்! ஆசையாக வந்த பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி..

மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக அயோத்தியா அழைத்து செல்வதற்காக 106 பேரிடம் விமான டிக்கெட் புக் செய்து மோசடி.

பயணிகள் – டிராவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் 106 பயணிகளுக்கும் வரும் 18ம் தேதி அயோத்தியா செல்ல ஏற்பாடு.

மதுரையில் இருந்து ஆன்மீக சுற்றுலா மூலம் அயோத்தி செல்வதற்காக இண்டிகோ விமானம் மூலம் 100 பயணிகளை அழைத்துச் செல்வதாக கூறி சேலம் ஜே.பி. டிராவல்ஸ் நிறுவனம் தலா 1 நபருக்கு விமான கட்டணம் தங்கும் வசதி உள்பட பணம் 29 ஆயிரம் வசூல் செய்து செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இன்டிகோ விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து அயோத்தியா செல்வதற்காக 106 பயணிகள் விமான நிலையம் வந்தடைந்தனர்.

இந்நிலையில் அப்படி எதுவும் புக் செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறியதையடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்து  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சேலம் ஜே.பி. டிராவல்ஸ் மேலாளார் ராஜா பயணிகளிடம் கலந்து பேசி வரும் 18ம் தேதி 106 பயணிகளையும் அயோத்தி அழைத்து செல்வதாக கூறியதையடுத்து பயணிகள் சமாதனம் அடைந்தனர்.

பின்னர் டிராவல்ஸ் நிறுவன ஏற்பாட்டின் படி 106 பயணிகளும் சேலம் புறப்பட்டு சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!