அரசு பணிமனை பஸ் மோதி முதியவர் பலி; காவல்துறை விசாரணை..

அரசு பணிமனை பேருந்து மோதி முதியவர் பலி; காவல்துறை விசாரணை..

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் பகுதியில் இருந்து எலக்ட்ரிக் பைக்கில் முதியவர் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் பின்னால் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறிய முதியவர் மீது பழங்காநத்ததில் இருந்து பைபாஸ் சாலை வழியாக பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பணிமனை பேருந்து பின் சக்கரத்தில் சக்கரம் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் மற்றும் திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவர் வைத்திருந்த அலைபேசியை வைத்து அவர் யார் என விசாரணை செய்த போது திருப்பரங்குன்றம் ஆர்.வி பட்டி பகுதியைச் சேர்ந்த சீதாராமன் வயது 60 இவர் தனியார் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இவருக்கு விஜயா என்கின்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளார். சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!