மதுரையில் போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ, பைக் உள்ளிட்டவைகளை அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர்..

மதுரையில் போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ, பைக் உள்ளிட்டவைகளை அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர்..

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை நாள்முழுவதும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகன போக்குவரத்து காரணம் பரபரப்புடன் காணப்படும். அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், ஐய்யப்பக்தர்கள் என வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரையை நோக்கி வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மதுரை பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த பொலிரோ கார் ஒன்று, பொன்மேனி பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது என அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக இவற்றில் பயணித்தவர்களுக்கு சிறுசிறு காயங்களுடன் தப்பித்தனர். இந்த நிலையில் அதிவேகமாக வந்த பொலிரோ கார் ஓட்டுநர் அளவுக்கதிகமான மது அருந்தியதாக தெரியவந்ததை தொடர்ந்து அவரை போக்குவரத்து புலனாய்வு போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மது போதையில் அதிவேகமாக காரை இயக்கி முன்னால் சென்ற வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!