மதுரை – ஆதரவற்ற பெண்ணுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி உதவி.

மதுரை ரயில்நிலைய வளாகத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் மயங்கி கிடப்பதாகவும் அவருக்கு உதவிடுமாறு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளைக்கு தகவல் தெரிவித்தனா்.துணை அவைத்தலைவர் ஜோஸ் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின்படி செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி அளித்து சமூக நலத்துறை பெண்கள்நல அலுவலர் பிரேமா உதவியோடு 108 ஆம்புலன்ஸ மூலமாக மீட்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விசாரணையில் அப்பெண்ணின் பெயர்  குமாரி என்பதும் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் கணவரோடு வாழ்ந்து வந்த நிலையில் உடல்நல பிரச்சனையால் கணவர் விரட்டி விட்டதாகவும் ரயில் மூலமாக மதுரை வந்ததாகவும் ஆதரவின்றி கடந்த ஒரு வாரமாக உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதும் தெரியவந்தது

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!