மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் டி ஆர் தொண்டு நிறுவனம் சார்பில் எல் அண்ட் டி பைனான்ஸ் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் கணவன் இழந்த பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் தின விழாவை கொண்டாடினார்கள் இந்த டிஜிட்டல் சக்தி மூலம் அனைத்து கிராமப்புற பெண்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறுவது ஆதார் கார்டு பிறப்புச் சான்றிதழ் இறப்பு சான்றிதழ் மற்றும் பண பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் சேவைகளை கற்றுக் கொடுப்பதோடு அதன் மூலம் வருவாயீட்ட பயிற்சி வழங்கி பெண்களை சமுதாயத்தில் முன்னிறுத்த இலவசமாக பயிற்சி அளிக்கிறது இதில் வாடிப்பட்டி தாலுக்கா அளவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் பெண்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரியும் பெண்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்புகள் செய்தனர் இதில் சமயநல்லூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் A.முத்துமணி மற்றும் டிஜிட்டல் சகி மேலாளர் மற்றும் டிஜிட்டல் சகி உறுப்பினர்கள் மற்றும் இதில் பயனடையும் கிராமப்புற பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









