இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்:-எம்.எச்.ஜவாஹிருல்லா…

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை!

கொரோனா பாதிப்பால் இலங்கை நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற சுமார் 2000 இந்தியர்கள் உணவு மற்றும் மருத்துவ உதவி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தங்களிடம் இருந்து சேமிப்புகள் அனைத்தையும் இழந்து இலங்கையில் சிக்கி நிர்காதியான விரக்தியில் வாழ்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், இந்த கொடுமையால் ஒருகட்டத்தில் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்கா போன்ற தொலைதூர வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவரும் மத்திய அரசு அருகில் உள்ள இலங்கையில் தவிக்கும் இந்தியர்களை மீட்க முன்வராதது வேதனைக்குரியது.

எனவே, இலங்கையில் கொரோனா ஊரடங்கு பிரச்சினையில் சிக்கி இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி 7 வடமரைக்காயர் தெரு சென்னை 600 001 20-05-20

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!