கொரோனா ஊரடங்கு காரணமாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் துவக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக, திருச்சியிலிருந்து – செங்கல்பட்டிற்கு இன்று சிறப்பு ரயில், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியே மெயின் லையனில் இயக்கப்பட்டது. இன்று காலை 9மணியளவில் மயிலாடுதுறைக்கு வந்த ரயிலில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர்.
மேலும், மயிலாடுதுறையில் இருந்து செங்கல்பட்டிற்கு வெறும் 40 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்து பயணம் செய்தனர். ரயில் நிலையத்தில் வெப்ப சோதனைக்கருவி மூலம் பயணிகள் பரிசோதிக்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டனர். முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் அதிக அளவில் பயணம் செய்வது தவிர்த்துள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.





You must be logged in to post a comment.