மயிலாடுதுறை அருகே 1ஏக்கரில் மாற்றுபயிராக நேரடி விதைப்பில் கேழ்வரகு சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயி வயலில் வேளாண் அதிகாரி நேரில் பார்வையிட்டார்.மயிலாடுதுறை வட்டாரம் உளுத்துக்குப்பை கிராமத்தில் திருஞானம் என்பவர் 1ஏக்கரில் கேழ்வரகு சாகுபடி செய்துள்ளார். டெல்டா பகுதிகளில் நேரடி நெல் விதைப்பில் அதிகம் சாகுபடி செய்து வரும் நிலையில் புதுமையாக நேரடி விதைப்பில் கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்ட வயலில் விளைச்சலை நேரில் வேளாண் அதிகாரி பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், மயிலாடுதுறை வட்டத்தில் மாற்றுபயிராக கேழ்வரகு பயிரிடப்பட்டுள்ளது. மேலும் புதுமாரியாக மக்காசோளம், கரும்பு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நுண்ணுயிர் பாசனத்திற்காக திருஞானத்திற்கு கருப்பு குழாய் கொடுப்பதற்கு ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தி விளைச்சலை மேற்கொள்ள அதற்கான வேளாண் உபகரணங்கள் அரசு மாணியவிலையில் வழங்கிவருகிறது.தகுதியுடைய சிறு-குறு விவசாயிகளுக்கு இலசவமாகவும், பெரு விவசாயிகளுக்கு 75சதவீதம் மாணியத்திலும் தெளிப்பு உபகரணங்கள், பொருட்கள் வழங்கப்படுகிறது.குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் காப்பீடுக்கான பிரீமியத்தொகையை செலுத்தி காப்பீடு செய்துகொள்ளவேண்டும் என்றார்.மேலும் வேளாண் உதவி இயக்குனர் வேளாண் அதிகாரிகள் நேரில் சென்று விவசாயிக்கு பாராட்டு தெரிவித்தனர். இதேபோல அனைத்து விவசாயிகளும் மாற்று விவசாயத்திற்கு முன் வரவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.





You must be logged in to post a comment.