வேலியில் சிக்கி காயம்பட்ட மயிலை மீட்டு சிகிச்சையளித்த பள்ளி சிறுவன்.வனத்துறையினரிடம் ஒப்படைத்தான்.

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் விஷால்(13), 8-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் பள்ளி விடுமுறை என்பதால் திருக்கருக்காவூர் கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கு உள்ள மாந்தோட்டம், கத்திரிதோட்டத்தில் தினந்தோறும் தனது மாமாவிற்கு உதவியாக தோட்டபயிர்களை தண்ணீர் ஊற்றி கவனித்து வந்துள்ளான்.இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை தோட்டத்து வேலி அருகே ஒரு ஆண் மயில் பறக்கமுடியாமல் தத்தளித்தை பார்த்த சிறுவன் விஷால் அதன் அருகே அச்சத்துடன் சென்றான். அப்போது அந்த மயில் வேலியில் சிக்கி தவிப்பதை பார்த்ததும் உடனடியாக முள்வேலியை அகற்றி மயிலை மீட்டு காலில் ஏற்பட்ட காயத்திற்கு மஞ்சள் தடவி அதனை பாதுகாப்பாக பராமரித்துவைத்துள்ளான். பின்னர் மயிலுக்கு தண்ணீர், சோளம், நெல் ஆகிய உணவு தாணியங்களை வழங்கியதுடன் பரிவுடன் அதன்மேல் பிரியமாக வீட்டு தோட்டத்தில் வைத்து காத்துள்ளான்.இதனை தனது மாமா ஜெயபாலிடம் கூறியுள்ளான். இது குறித்து அவர் சீர்காழி வனத்துறைக்கும் தகவல் அளித்தார். அதன்பேரில் வனசரகர் வி.குமரேசன், வனகாப்பாளர் செல்வம் மற்றும் வன ஊழியர்கள் நேரில் சென்றனர். அவர்களிடம் சிறுவன் விஷால் மயிலை ஒப்படைத்தான். காயம்பட்ட மயிலை மீட்டு அதன்காயத்திற்கு மருந்து அளித்து, உணவுதாணியம் வைத்து பாதுகாத்த சிறுவனை வனத்துறையினர், கிராமமக்கள் பாராட்டினர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!