மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்தில் வரும் சம்பா பட்டத்திற்கான விதை நெல், நுண்ணூட்டங்கள்,உயிர் உரங்கள் மற்றும் நூண்ணீர் பாசன கருவிகள், ஆயில் இஞ்சின் உள்ளிட்டவை வழங்கும் விழா நடைபெற்றது.
கொள்ளிடம் வட்டார வேளாண்துறை இணை இயக்குனர் சுப்பையன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக வேளாண்மை இயக்குனர் தெட்சினாமூர்த்தி கலந்து கொண்டு பயனிளிகளுக்கு பொருட்களை வழங்கினார்.முன்னதாக உயிர் உரங்கள் இடபட்ட வயல்களையும் நிரந்த பூச்சி தடுப்பு அமைப்பு ஏற்படுத்தபட்டுள்ள குறுவை சாகுபடி பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பயிர்காப்பீடு முனைப்பு இயக்கத்தை துவக்கி வைத்து துண்டு பிரசுரங்களை விவசாயிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அவருடன் மாவட்ட வேளாண் துனை இயக்குர் மதியரசன், மாவட்ட ஆட்சியரின் வேளாண்துறை நேர்முக துணை இயக்குனர் தவமணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.





You must be logged in to post a comment.