மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுனாமி நகரை சேர்ந்தவர் பரசுராமன் மகன் ரஞ்சித் (25) இவர் தனது பைபர் படகை பூம்புகார் கடற்பகுதியில் காவிரி சங்கமம் தோணித்துறையில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ரஞ்சித் பைபர் படகு தீப்பிடித்து எரிந்தது இதனை பார்த்த மீனவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதில் படகு மற்றும் படகில் வைத்திருந்த
வலைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன சேத மதிப்பு 70 லட்சம் ஆகும்.இது குறித்த புகாரின் பேரில் பூம்புகார் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நேரில் சென்று ஆய்வு செய்தார். மற்ற படகுகளின் பாதுகாப்பு குறித்தும் விசாரனை செய்தார். சில வாரங்களுக்கு முன்பு பூம்புகார் அருகே பைபர் படகு என்ஜினில் மர்ம நபர்கள் மண்ணை அள்ளி கொட்டி சேதப்படுத்தியது குறிப்பிடதக்கது .மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடி வலை பயன்பாடு குறித்து பல்வேறு மீனவ கிராமங்களில் ஆதரவு, எதிர்ப்பு போராட்டம் நடந்து வந்தது. மீனவர்கள் போராட்டத்தையொட்டி மீனவ கிராமங்களில் வஜ்ரா வாகனங்களுடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.