வள்ளுவக்குடி கிராம டாக்டர் அம்பேத்கார் நற்பணி மன்றம் இளைஞர்கள் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வள்ளுவக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் இருபுறமும் மூன்று வகையான மரக்கன்றுகளை அப்பகுதி டாக்டர் அம்பேத்கார் நற்பணி மன்றம் மன்றத்தினர் ஒன்று சேர்ந்து ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளனர்.மேலும், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்களை வெட்டி வரும் நிலையில் இது போன்று கிராமங்களில் இளைஞர்கள் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு மழைவளம் காக்கவும் சாலை ஓரங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் வகையில் கரைகளை பலப்படுத்த உதவும் எனவும் தெரிவித்தனர்.இளைஞர்களின் இச்செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இவர்களை கண்டு ஒவ்வொரு கிராம இளைஞர்களும் மரம் வளர்க்க முன்வர வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!