சுருக்குமடி வலைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்றால் 21 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் இறங்கி தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் சுருக்குமடி வலைக்கு ஆதரவான கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த நம்பியார் நகர், பூம்புகார், திருமுல்லைவாசல் பழையார், மடவாமேடு உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். சுருக்குமடி வலையால் சிறு தொழில்கள் பாதிக்கப்படுவதாக கூறிய குற்றச்சாட்டு குறித்து மீனவர்களிடையே கலந்து ஆலோசனை செய்தனர். மேலும் தமிழக அரசு சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சிறு தொழில் செய்யும் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காலை 6 மணிக்கு மேல் சுருக்குவலை மீனவர்கள் கடலுக்குச் செல்வது எனவும், சிறு தொழில் செய்யும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் விற்ற பிறகு காலை 10 மணிக்கு மேல் சுருக்குமடி வலை மூலம் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வது எனவும் இந்த தீர்மானத்திற்கு கட்டுப்படாதவர்கள் பிடித்து வரும் மீன்களை மீனவர்களை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவதாகவும், வருகின்ற 16-ஆம் தேதிக்குள் அரசு நல்ல முடிவை அறிவிக்கவில்லை என்றால் 17-ம் தேதி கடலில் இறங்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!