மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி,கருவாழக்கரை ஊராட்சியில் 700 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் எம். எல். ஏ. பவுன்ராஜ் வழங்கினார்
. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு கருவாழக்கரை ஊராட்சியில் 700 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். இதில், கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கபடி பாண்டியன், கருவாழக்கரை ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், அதிமுக மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுமதி விஸ்வநாதன், தமிழரசு, கலியமூர்த்தி, லோகநாயகி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.