மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வட்டக்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான அனைத்து குடும்பங்களுக்கு தல மத்திய அரசு ரூ 7,500 மாநில அரசு ரூ 5000 நிவாரணம் வழங்க வேண்டும். நூறுநாள் வேலையை 200 நாளாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ600 கூலி வழங்க வேண்டும்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் உற்பத்திஇழப்பிற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.விவசாயிகள்- ஏழைகள் பயன்படுத்திவந்த இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். பாசன வடிகால் தூர்வாரும் பணியை ஊழல் இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு பாசனதார விவசாயிகளைக் கொண்டு பணி செய்ய வேண்டும். கொரோனா பாதிப்புக்கு, மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி. இராசையன், ஏ.ரவிச்சந்திரன் , வட்டக்குழு உறுப்பினர்கள் காபிரியேல், பஷீர் அகமது, வில்லியம், குணசேகர் ஆகியோர் உரையாற்றினர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.