டெல்டா பாசனத்திற்காக கடந்த 13-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர். காவிரி ஆற்றில் நீரைதிறந்து வைத்தார் . இந்த நீர் பல்வேறு மாவட்டங்களில் கடந்து கடைமடை பகுதியான மயிலாடுதுறை துலாகட்டத்திற்கு வந்தடைந்தது.
காவிரி நீரை வரவேற்கும் விதமாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு ஆற்று நீரில் பால் ஊற்றியும், தீபம் ஏற்றியும் வரவேற்றனர். சில தண்ணார்வலர்கள் சிவன், விநாயகர், பார்வதி, கங்காதேவி, அகத்திய முனிவர், முருகன் போன்ற வேடமணிந்து காவிரி நீரை வரவேற்றனர்.
இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்





You must be logged in to post a comment.