பள்ளிக்குழந்தையின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட அன்பு அறக்கட்டளை; ஆதரவற்ற முதியோருக்கு புதிய ஆடை- நெகிழும் மயிலாடுதுறை மக்கள்…

மயிலாடுதுறையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான கொ.அன்புகுமார் நடத்திவரும் “அன்பு அறக்கட்டளை” டெல்டா பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறது. கடந்தவாரம் மயிலாடுதுறை அருகே இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கவிதா என்ற 6-ம் வகுப்பு மாணவியை விடுதியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு, அதில் வெற்றிக்கண்ட அன்பு அறக்கட்டளை, நேற்றைய தினம் அதே பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பள்ளி மாணவியின் படிப்பு செலவுக்கான முழு தொகை மற்றும் கல்வி உபகரணங்களை  அவரது வீட்டிற்கே சென்று வழங்கிறார்கள் அன்பு அறக்கட்டளை நிர்வாகிகள். மிக ஏழ்மையான நிலையில் 4 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தவர்களின் பெரும் சுமையை  அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார் அன்பு அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான கொ.அன்புகுமார். அந்த மாணவியின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ஊரடங்கு காலத்திலும் அவருக்காக நோட்டு புத்தகங்கள் எழுதுகோல் ஆகியவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்.

மேலும், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ஆதரவற்ற மாற்று துணிக்கு கூட வழியில்லாமல் தவித்த மாணிக்கம் என்பவருக்கு புதிய ஆடைகள், போர்வை உள்ளிட்டவைகளை வழங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் மயிலாடுதுறை மக்கள், தனது சொந்த வருமானத்தைதையும் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் சிறு சிறு தொகையிலும்  பெரிய பெரிய காரியங்களை சப்தமில்லாமல் செய்துவரும் அன்பு அறக்கட்டளையின் சேவை, நம்பிக்கையூட்டுவதாக தெரிவிக்கின்றனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!