கூத்தூர் கிராமத்தில் மின் கம்பத்தின் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் 3 பசுமாடுகள் இளைஞன் மரணம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சேமங்கலம் பஞ்சாயத்து கூத்து கிராமத்தில் கடந்த சில தினங்களாக வயல்வெளிகளில் போகும் மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது. அதனை கண்ட பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலை 6 மணி அளவில் மேய்ச்சலுக்காக இரண்டு மாடுகள் ஒரு கன்று குட்டியை அழைத்துக்கொண்டு பாலகிருஷ்ணனின் மகன் சீதாராமன் 26 என்பவர் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு தாழ்வான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பிகள் திடீரென அறுந்து சீதாராமன் மேலே விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து இரண்டு பசுமாடுகள் ஒரு கன்றுக்குட்டி இளைஞர் சீதாராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து பாகசாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சீதாராமன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!